பக்கம்:திருத்தலப் பயணம்.pdf/236

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொங்கு நாடு 205 கொங்கு நாட்டுக் கொடுமுடிக்குப் பாண்டிக் கொடுமுடி என ஏன் பெயர் வந்தது என்பது ஆராய்ச்சிக்குரியது. சம்பந்தர் போகமும் இன்பமும் ஆகிப் போற்றிஎன் பார்.அவர் தங்கள் ஆகமும் உறைவிட மாக அமர்ந்தவர் கொன்றையி னோடும் நாகமும் திங்களும் சூடி நன்னுதல் மங்கைதன் மேனிப் பாகம் உகர்ந்தவர் தாமும் பாண்டிக் கொடுமுடி யாரே. அப்பர் சிட்ட னைச்சிவ னைச்செழும் சோதியை அட்ட மூர்த்தியை ஆல நிழல்அமர் பட்ட னைத்திருப் பாண்டிக் கொடுமுடி நட்ட னைத்தொழ நம்வினை நாசமே. சுந்தரர் எல்லை யில்புகழ் எம்பி ரான்எந்தை தம்பி ரான்என்பொன் மாமணி கல்லை உந்தி வளம்பொ ழிந்துஇழி காவி ரியதன் வாய்க்கரை நல்ல வர்தொழுது ஏத்தும் சிர்க்கறை ஊரில் பாண்டிக் கொடுமுடி வல்ல வாஉனை நான்ம றக்கினும் சொல்லும்நா. நமச்சி வாயவே. 215. கருவூர் பசபதிசுரர்-கிருபாநாயகி சவுந்திரநாயகி சம்பந்தர் : 1. வழிபட்டநாள் : 10-11-56, 7-1-66. திருச்சி-ஈரோடு இருப்புப் பாதையில் உள்ள இரயில் நிலையம்.