பக்கம்:திருத்தலப் பயணம்.pdf/237

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

206 திருத்தலப்பயணம் இத்தலத்திலுள்ள கோயிலுக்கு ஆநிலை என்று பெயர். கோவில் பெரியது. தேவ சந்நிதி இரண்டு இருக்கின்றன. எறிபத்த நாயனார் பிறந்தருளிய தலம் இது. புகழ்ச் சோழ நாயனார் அருமையாக அரசாண்டபதி இது. சிவகாமி ஆண்டார் என்னும் பெரியவர் இப்பதியில் வாழ்ந்ததாகப் பெரிய புராணம் சொல்லும், தித்திக்கும் திருவிசைப்பாப்பாடிய கருவூர்த்தேவர் பிறந்தருளி வீடுபேறு அடைந்த தலம் இது. கோவிலுக்குள் தென்மேற்கு மூலையில் கருவூர்த் தேவருக்கு ஒரு கோயில் இருக்கின்றது. கருவூர்த் தேவர் திரு உருவத்தை இராச இராசிச்சுரம் என்னும் தஞ்சைப் பெரிய கோயிலிலும் காணலாம். சம்பந்தர் தேவர் திங்களும் பாம்பும் சென்னியில் மேவர் மும்மதில் எய்த வில்லியர், காவ லர்கரு ஆருள் ஆனிலை மூவ ராகிய மொய்ம்பர் அல்லரே. சேக்கிழார் பொன்மலைப் புலிவென்று ஒங்கப் புதுமலை இடித்துப் போற்றும் அந்நெறி வழியே ஆக அயல்வழி அடைத்த சோழன். மன்னிய அநபா யன்சிர் மரபின்மா நகரம் ஆகும். தொல்நெடும் கருவூர் என்னும் சுடரிமணி வீதி மூதூர்.