பக்கம்:திருத்தலப் பயணம்.pdf/239

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

216. திருநெல்வாயில் அரத்துறை (திருஅரத்துறை) அரத்துறைநாதர்-ஆநந்தநாயகி சம்பந்தர் : 1. அப்பர் : 1. சுந்தரர் : 1. வழிபட்டநாள் : 5-7-57, 5-1-66. விழுப்புரம்-திருச்சி இருப்புப்பாதையில் உள்ள பெண்ணாகடம் என்னும் இரயில் நிலையத்திற்குத் தென்மேற்கே 3 கல் அளவில் இருக்கிறது. கோயில் நிவா என்னும் ஆற்றின் வடகரையில் இருக்கிறது. சம்பந்தப் பெருமானுக்கு முத்துச் சிவிகையும், முத்துக் குடையும் சிவபெருமான் கொடுத்தருளிய தலம் இது. சம்பந்தர் காழி யானைக் கனவிடை ஊரும்மெய் வாழி யானைவல் லோரும்என்று இன்னவர் ஆழி யான்பிர மற்கும் அரத்துறை ஊழி யானைக்கண் டீர்நாம் தொழுவதே. அப்பர் வெருகு ரிஞ்சுவெங் காட்டில் ஆடிய விமலன்என்று உள்கி, உருகி நைபவர்க்கு அல்லால் ஒன்றும்கை கூடுவது அன்றால் முருகு ரிஞ்சுபூஞ் சோலை மொய்ம்மலர் சுமந்துஇழி நிவாவந்து அருகு ரிஞ்சுநெல் வாயில் அரத்துறை அடிகள்தம் அருளே.