பக்கம்:திருத்தலப் பயணம்.pdf/240

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

210 திருத்தலப்பயணம் சுந்தரர் கோடுயர் கோங்குஅலர் வேங்கைஅலர் மிகஉந்தி வரும்நிவ வின்கரைமேல் நீடுயர் சோலைதெல் வாயில்அரத் -துறைதின்மல னேநினை வார்மனத்தாய்! ஒடு புனல்கரை யாம்இளமை உறங்கிவிழித் தால்ஒக்கும் இப்பிறவி வாடி இருந்து வருந்தல்செய்யாது அடியன் உய்யப் போவதோர் சூழல்சொல்லே. 217. பெண்ணாகடம் (திருக்கடந்தைநகர்) சுடர்க்கொழுந்திசர்-கடந்தைநாயகி சம்பந்தர் : 1. அப்பர் : 1. வழிபட்டநாள் : 6-7-57, 5-1-66. விழுப்புரம்-திருச்சிஇருப்புப்பாதையில் உள்ள பெண்ணாகடம் என்னும் இரயில் நிலையம். விருத்தாசலத்தினின்றும் திட்டக்குடி செல்லும் பாதையில் 11 கல் அளவு. இத்தலத்துக்கோயிலுக்குத்துங்கானை மாடம் என்பது பெயர். இக்கோயிலில் மகாலிங்கம் இருக்கின்ற கர்ப்பக்கிருகத்தில் முன்வாயில் தவிர ஏனைய மூன்றுபுறங்களிலும் இறைவனைக் கண்டு வணங்குமாறு சன்னல்கள் அமைத்திருப்பது ஒர் தனிச் சிறப்புடையது. கலிக்கம்ப நாயனார் பிறந்தது இத்தலத்தில், அப்பர் சுவாமிகளுக்குத் தோளில் சூலக்குறியும். இடபக் குறியும் பொறிக்கப் பெற்ற தலம் இது. சிவஞானபோதம் அருளிய மெய்கண்ட தேவரின் தந்தையார் அச்சுதக்களப்பாளர் இவ்வூரில்வாழ்ந்தனர் என்பர். இத்தலத்துக்குக் கோவிலுக்குப் பக்கத்தில் உள்ள வயல் வெளியில் மெய்கண்டாருக்கு ஒரு சிறு கோயில் இருக்கிறது.