பக்கம்:திருத்தலப் பயணம்.pdf/241

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நடு நாடு 党篮盘 சம்பந்தர் சாதாளும் வாழ்நாளும் தோற்றம்இவை சலிப்பாய வாழ்க்கை ஒழியத்தவம் ஆமாறு அறியாது அலமந்து,நீர் அயர்ந்தும் குறையவில்லை; ஆன்ஏறுடைப் பூமாண் அலங்கல் இலங்குகொன்றை. புனல்பொதிந்த புன்சடையி னான்உறையும் துரமாண் கடந்தைத்த டங்கோயில்சேர் துரங்கானை மாடம் தொழுமின்களே. அப்பர் பொன்னார் திருவடிக்கு ஒன்றுஉண்டு விண்ணப்பம் போற்றிசெய்யும் என்ஆவி காப்பதற்கு இச்சையுண் -டேல்இரும் கூற்றுஅகல மின்னாரும் மூவிலைச் சூலம்என் மேல்பொறி மேவுகொண்டல் துன்னார் கடந்தையுள் தூங்கானை மாடச் சுடர்க்கொழுந்தே 218. கூடலையாற்றுார் நெறிகாட்டுநாயகர்-புரிகுழலம்மை சுந்தரர் : 1. வழிபட்டநாள் : 23-12-56, 5-1-66 விருத்தாசலத்திலிருந்து புவனகிரிக்குப்போகும் சாலையில் 12 மைல் அளவிலுள்ள வளையமாதேவி என்னும் ஊரை அடைந்து, அங்கிருந்து தெற்கே 2 மைல் செல்ல வேண்டும். மணிமுத்தா நதி, வெள்ளாறு என்ற இரண்டும் கூடும் இடத்தில் கோயில் இருக்கிறது. இத்தலத்திற்குத் தென்மேற்கே 4 கல் அளவில் பூரீ முஷ்ணம் என்னும் சிறந்த திருமால் தலம் இருக்கின்றது.