பக்கம்:திருத்தலப் பயணம்.pdf/242

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

212 திருத்தலப்பயணம் சுந்தரர் வையகம் முழுதுண்ட மாலொடு நான்முகனும் பையரவு இளஅல்கும் பாவையொ டும்முடனே கொய்யணி மலர்ச்சோலைக் கூடலை யாற்றுாரில் ஐயன்.இவ் வழிபோந்த அதிசயம் அறியேனே. 219. எருக்கத்தம்பூலியூர் (இராசேந்திரப்பட்டினம்) நீலகண்டேசுரர்-நீலமலர்க்கண்ணி சம்பந்தர் : 1. வழிபட்டநாள் : 23-12-56, 5-1-66. விருத்தாசலத்திற்குத் தெற்கே 7 கல் அளவு. கோவிலுக்குள் வெள்ளெருக்கம் செடி ஒன்று காணப்படுகிறது. திருஞானசம்பந்தமூர்த்தி சுவாமிகள் உடன் இருந்து அவர் பாடிய தேவாரங்களை வீணையில் பொருத்திப் பாடிய திருநீலகண்ட யாழ்ப்பாணர் பிறந்தது இத்தலத்தில். இதற்குக் கிழக்கே நான்கு மைலில் திருமுட்டம் என்னும் திருப்பதி இருக்கிறது. திருமுட்டம் சிதம்பரத்தினின்றும் 24 மைல். சம்பந்தர் விண்ணோர் பெருமானே! விகிர்தா! விடைஊர்தி! பெண் ஆண் அலியாகும் பித்தா! பிறைசூடி! எண்ணார் எருக்கத்தம் புலியூர் உறைகின்ற அண்ணா! எனவல்லார்க்கு அடையா வினைதானே