பக்கம்:திருத்தலப் பயணம்.pdf/244

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

214 திருத்தலப்பயணம் 221. திருச்சோபுரம் (தியாகவல்லி) சோபுரநாதர்-சோபுரநாயகி சம்பந்தர் : 1. வழிபட்டதாள் : 8-10-57, 19-3-66. சிதம்பரம்-கடலூர் இருப்புப் பாதையில் உள்ள ஆலப் பாக்கம் இரயில் நிலையத்தினின்றும் வடகிழக்கே 2 கல் அளவில் இத்தலம் இருக்கின்றது. இடையே உப்பங்கழியைத் தோணியில் கடக்க வேண்டும். அதற்கு அப்புறம் நல்ல மணலில் நடந்து செல்ல வேண்டும். மணல் சூழ்ந்த இடத்தில் இக் கோவில் இருக்கின்றது. சம்பந்தர் குற்றமின்மை உண்மைநீஎன்று உன்அடியார் பணிவார் கற்றல்கேள்வி ஞானமான காரணம்என் னைகொலாம். வற்றல்ஆமை வாள்.அரவம் பூண்டுஅயன்வெண் தலையில் துற்றலான கொள்கையானே! சோபுரமே யவனே! 222. திருஅதிகை வீரட்டேசுரர்-திரிபுரசுந்தரி சம்பந்தர் : 1. அப்பர் : 16 சுந்தரர் : 1. வழிபட்டநாள் : 5-7-57, 3-12-65. பண்ணுருட்டி இரயில் நிலையத்திற்குத் தென்கிழக்கு 1 கல் தொலைவு. கெடில நதியின் வடகரையில் கோயில் இருக்கின்றது. இது அட்ட வீரட்டத் தலங்களுள் ஒன்று. விரிசடைக் கடவுள் திரிபுரத்தை எரித்த தலம் இது. திருநாவுக்கரசு சுவாமிகளின் உடன் பிறந்த திலகவதி யம்மையார் திருத்தொண்டுசெய்து.சிவபெருமானை வழிபட்ட