பக்கம்:திருத்தலப் பயணம்.pdf/245

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நடு நாடு 215 சிறப்புடைய தலம் இது. தம்பியாருக்கு, திலகவதியார் திருவாளன் திருநீறு அளித்து, வயிற்று வலியைத் திர்த்த திருப்பதி இது. திருநாவுக்கரசு சுவாமிகள் முதன்முதலாக,"கூற்றாயினவாறு" என்று தொடங்கும்தேவாரப்பதிகத்தை இத்தலத்திலேயே பாடி அருளினார். இக்கோவிலில் சிவலிங்கம் பட்டை பட்டையாக, அழகாகக் காட்சியளிக்கின்றது. கோயில் மிகப் பெரியது. அப்பர் சுவாமிகள், திலகவதியார் திருவுருவங்கள் இக்கோவிலில் இருக்கின்றன. சைவசித்தாந்த சாத்திரங்கள் பதினான்கினுள் ஒன்றாகிய "உண்மைவிளக்கம்" நூல்செய்த மனவாசகங்கடந்தார் பிறந்த தலம் இது. சம்பந்தர் அரும்பும் குரும்பையும் மலைத்த மென்கொங்கைக் கரும்பின் மொழியாளோடு உடன்கை அனல்வீசிச் சுரும்புஉண் விரிகொன்றைச் சுடற்பொற் சடைதாழ விரும்பும் அதிகையுள் ஆடும்வீரட் டானத்தே. அப்பர் கூற்றாயின வாறு விலக்ககிலீர்! கொடுமைபல செய்தன. நான் அறியேன்: ஏற்றாய்அடிக் கேஇர-வும்.பகலும் பிரியாது வணங்குவன் எப்பொழுதும் தோற்றாதுஎன் வயிற்றின் அகம்படியே குடரோடு துடக்கி முடக்கியிட ஆற்றேன்.அடி யேன்.அதி கைக்கெடில வீரட்டா னத்துறை அம்மானே!