பக்கம்:திருத்தலப் பயணம்.pdf/246

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

216 திருத்தலப்பயணம் சுந்தரர் வெய்தாய வினைக்கடலில் தடுமாறும உயாககு மிகஇரங்கி, அருள்புரிந்து வீடுபேறு ஆக்கம் பெய்தானைப் பிஞ்ஞகனை. மைஞ்ளுவிலும் கண்டத்து எண்தோள்ளம் பெருமானை, பெண்பாகம் ஒருபால் செய்தானைச் செக்கர்வான் ஒளியானைத் திவாய் அரவாடு சடையானைத் திரிபுரங்கள் வேவ எய்தானை. எறிகெடில வடவீரட் டானத்து உறைவானை இறைபோதும் இகழ்வன்போல்யானே. சேக்கிழார் திரைக்கெடில வீரட்டா னத்துஇருந்த செங்கணக வரைச்சிலையார் பெருங்கோயில் தொழுதுவலம் கொண்டுஇறைஞ்சித் தரைத்தலத்தின் மிசைவீழ்ந்து தம்பிரான் திருவருளால் உரைத்தமிழ்மா லைகள்சாத்தும் உணர்வுபெற உணர்ந்துஉரைப்பார் 223. திருநாவலுர் (திருநாமநல்லூர்) திருநாவலேசுரர்-சுந்தரநாயகி.மனோன்மணிஅம்மை சுந்தரர் : 1. வழிபட்டநாள் 5-7-57, 3-12-65. திருவெண்ணெய் நல்லூருக்குத் தென்கிழக்கு 5 கல் அளவு. பண்ணுருட்டி இரயில் நிலையத்திலிருந்து 10 கல் தொலைவு. நாயன்மார்களை உலகத்துக்குக் காட்டிய "திருத்தொண்டத் தொகை" செய்த பெரிய புராணத்துக்கு மூலகாரணராக இருந்த, சுந்தரமூர்த்தி சுவாமிகள் பிறந்து அருளிய திருப்பதி இது. சுந்தரரைப் பெற்றெடுத்த தாய் தந்தையராகிய இசை ஞானியார்-சடையனார் ஆகிய இரண்டு நாயனாரும் வாழ்ந்த பதி இது என்று சொல்லவும் வேண்டுமோ?