பக்கம்:திருத்தலப் பயணம்.pdf/247

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நடு நாடு 217 திருநாவலூரினின்றும் பண்ணுருட்டி செல்லும் சாலையில் 5, 6 மைல் சென்று. வலது கைப்பக்கமாகத் திரும்பி ஒரு மைல் சென்றால் திருஆமூரை அடையலாம். திருநாவுக்கரசு சுவாமிகளும், திலகவதியாரும் பிறந்தருளிய ஊர் திருஆமூர். "தெய்வ நெறிச் சிவம் பெருக்கும் திருஆமூர். திருஆமூர்" என்பார் சேக்கிழார் அடிகள். திருஆமூரில் திருநாவுக்கரசு சுவாமிகள் வாழ்ந்ததாகக் கருதப்பெறுகிறஒர் இடத்தில் புதிதாக அவருக்கு ஒரு கோயில் கட்டியிருக்கின்றார்கள். கோயில் நல்ல புதிய முறையில் அமைக்கப் பெற்றிருக்கின்றது. அக்கோயிலில் திருநாவுக்கரசர், திலகவதியார், அவர்களின் பெற்றோர்களாகிய புகழனார். மாதினியார் ஆகியவர் திருவுருவங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு சதய நாளிலும் சிறப்பாக வழிபாடு நடைபெறுகின்றது. திருநாவுக்கரசர், சுந்தரமூர்த்திகள் ஆகிய இரண்டு பெரியார்களும் இவ்வளவு அண்மையில் தோன்றிய காரணத்தால் அவர்கள் பிறந்த திருமுனைப்பாடி நாட்டைப் பின்வரும்பாடலால் சேக்கிழார் அடிகள் பாராட்டி மகிழ்வார். மறந்தருதி நெறிமாற மணிகண்டர் வாய்மைநெறி அறந்தருநா வுக்கரசும் ஆலால சுந்தரரும் பிறந்தருள உளதானால் நம்மளவோ? பேருலகில் சிறந்ததிரு முனைப்பாடித் திறம்பாடும் சிர்ப்பாடு. வில்லிபுத்துராழ்வார் மைந்தர் வரந்தருவார். தேவரும் மறையும் இன்னமும் காணாச் செஞ்சடைக் கடவுளைப் பாடி, யாவரும் மதித்தோர் மூவரில் இருவர் பிறந்தநாடு இந்தநன் னாடு. என்று எக்களிப்போடு இயம்புவார். சுந்தரர் நாதனுக்கு ஊர்நமக்கு ஊர்.நர சிங்க முனை அரையன் ஆதரித்து ஈசனுக்கு ஆட்செயும் ஊர்அணி நாவலூர் என்று ஒதநல் தக்கவன் தொண்டன்ஆ ரூரன் உரைத்ததமிழ் காதலித் தும்,கற்றும் கேட்பவர் தம்வினைக் கட்டுஅறுமே.