பக்கம்:திருத்தலப் பயணம்.pdf/248

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

있8 திருத்தலப்பயணம் சேக்கிழார் பெருகிய நலத்தால் மிக்க பெருந்திரு நாடு தன்னில் அருமறைச் சைவம் ஓங்க அருளினால் அவத ரித்த மருவிய தவத்தால் மிக்க வளம்பதி, வாய்மை குன்றாத் திருமறை யவர்கள் நீடும் திருநாவ லுராம் அன்றே. 224. திருமுதுகுன்றம் (விருத்தாசலம்) பழமலைநாதர்-பெரியநாயகி.பாலாம்பிகை. சம்பந்தர் : 7 அப்பர் : 1. சுந்தரர் : 3. வழிபட்டநாள் : 6-7-57, 5-1-66 திருச்சி-விழுப்புரம் இருப்புப் பாதையில் உள்ள இரயில் நிலையம், இரயில்வே சந்திப்பினின்றும் கோயில் இரண்டு கல் தொலைவில் இருக்கின்றது. கோவில் மிகப்பெரியது. அம்மன் சந்நிதி இரண்டு இருக்கின்றன. முதுகுன்றம், பழமலை, விருத்தாசலம் எல்லாம் ஒரே பொருளைக் குறிப்பன. தரைக்குக் கீழ் 16 படிகள் இறங்கி அங்குள்ள ஆழத்துப் பிள்ளையாரை வணங்க வேண்டும். சம்பந்தர் மஞ்சர்தாம் மலர்கொடு வானவர் வணங்கிட வெஞ்சொலார் வேடரோடு ஆடவர் விரும்பவே அஞ்சொலாள் உமையொடும் அமர்விடம் அணிகலைச் செஞ்சொலார் பயில்தரும் திருமுது குன்றமே.