பக்கம்:திருத்தலப் பயணம்.pdf/249

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நடு நாடு 219 அப்பர் எத்திசையும் வானவர்கள் தொழநின் றானை, ஏறு ர்ந்த பெம்மானை, எம்மான் என்று பத்தனாய்ப் பணிந்து அடியேன் தன்னைப் பன்னாள் பாமாலை பாடப் பயில்வித் தானை, முத்தினை.என்மணியை, மாணிக் கத்தை. முளைத்துஎழுந்த செம்பவளக் கொழுந்துஒப்.பானை சித்தனை.என் திருமுதுகுன்று உடையான் தன்னை, திவினையேன் அறியாதே திகைத்த வாறே. சுந்தரர் கொந்தன வும்பொழில்துழி குளிர்மாமதில் மாளிகைமேல் வந்தன வும்மதிசேர் சடைமாமுது குன்றுடையாய்! பந்தன வும்விரலாள் பரவை இவள் தன்முகப்பே அந்தண னே!அருளாய் அடியேன்.இட் டளம்கெடவே. சேக்கிழார் "மொய்கொள் மாமணி கொழித்துமுத்து ஆறுஆழி முதுகுன்றை அடைவோம்"என்று எய்து சொல்மலர் மாலைவண் பதிகத்தை இசையொடும் புனைந்துஏத்திச் செய்த வத்திரு முனிவரும் தேவரும் திசைஎலாம் நெருங்கப்புக்கு ஐயர் சேவடி பணியும்அப் - பொருப்பினில் ஆதர வுடன்சென்றார். 225. திருநெல்வெண்ணெய் (நெய்வெணை) வெண்ணெயப்பர்-நீலமலர்க்கண்ணி சம்பந்தர் : 1. வழிபட்டநாள் : 25-6-58, 5-1-66. உளுந்துளர்ப்பேட்டை இரயில் நிலையத்திலிருந்து வடமேற்கே நான்கு கல் தொலைவு. பாதை மிகவும் மோசமானது