பக்கம்:திருத்தலப் பயணம்.pdf/250

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

220. திருத்தலப்பயணம் நல்வெணெய் விழுதுபெய் தாடுதிர் நாள்நொறும் நெல்வெணெய் மேவிய நீரே நெல்வெணெய் மேவிய நீர்உமை நாள்தொறும் செல்வனம் இடுவது சொல்லே. 226. திருக்கோவலூர் வீரட்டேசுரர்-சிவானந்தவல்லி சம்பந்தர் : 1. அப்பர் : 1. வழிபட்டநாள் : 3-12-57 8-12-கே. விழுப்புரம்-திருவண்ணாமலை இருப்புப் பாதையில் உள்ள இரயில் நிலையம். பெண்ணையாற்றின் தென்கரையில் கோயில் இருக்கின்றது. இத்தலம் அட்டவீரட்டங்களுள் ஒன்று. அந்தகாசுரனை அழித்த பதி. இத்தலத்தில் திவ்வியப் பிரபந்தம் பெற்ற உலகளந்த பெருமாள் கோயில் இருக்கின்றது. இத்தலத்தைப் பற்றி அப்பர் சுவாமிகள் பாடிய, "தலை சுமந்து இருகைநாற்றி" என்ற சொல் தொடரை, கவிச் சக்கரவர்த்தி கம்பர் எடுத்து ஆண்டிருக்கின்றார். - மெய்ப்பொருள் நாயனார் பிறந்து, சிறப்பாக அரசாண்டு தன்னைக் கொன்றவனையும் மன்னித்த திருப்பதி இத்திருக் கோவலூர். சம்பந்தர் உரையும்பாட்டும் தளர்வுஎய்தி உடம்புமூத்த போதின்கண் நரையும்திரையும் கண்டுஎள்கி நகுவர்நமர்கள் ஆதலால் வரைகொள்பெண்ணை வந்துலா வயல்கள்து.ழ்ந்தகோவலூர் விரைகொள்சிர் வெண்ணிற்றினான் வீரட்டானம் சேர்துமே.