பக்கம்:திருத்தலப் பயணம்.pdf/251

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நடு நாடு 221 அப்பர் தலைசுமந்து இருகை நாற்றித் தரணிக்கே பொறைய தாகி. நிலையிலா நெஞ்சம் தன்னுள் நித்தலும் ஐவர் வேண்டும் விலைகொடுத்து அறுக்க மாட்டேன்.வேண்டிற்றே வேண்டி எய்த்தேன். குலைகொள்மாங் கனிகள் சிந்தும் கோவல்வீ ரட்ட mரே. சேக்கிழார் சேதிநன் னாட்டுநீடு திருக்கோவ லூரின் மன்னி மாதொரு பாகர் அன்பின் வழிவரு மலாடர் கோமான் வேதநன் னெறியின் வாய்மை விளங்கிட மேன்மை பூண்டு காதலால் ஈசற்கு அன்பர் கருத்துஅறிந்து ஏவல் செய்வார். வில்லிபுத்துனர் ஆழ்வார் உருகும்கமழ் நெய்பால்இரு பாலும்கரை ஒத்துப் பெருகும்துறை ஏழ்ஏழு பிறப்பும்கெட மூழ்கி, கருகும்கரு முகில்மேனியர் கவிஞானியர் கண்ணில் பருகும்சுவை அமுதுஆனவர் பாதம்தலை வைத்தான். 227. அறையணிநல்லுனர் அறையணிநாதர்-அருள்நாயகி சம்பந்தர் : 1. வழிபட்டநாள் : 3-12-57, 6-12-65. திருக்கோவலூர் கோயிலுக்கு வடக்கே பெண்ணையாற்றின் வடகரையில் ஒரு சிறு குன்றில் இக்கோயில் இருக்கின்றது. மேற்குப் பார்த்த சந்நிதி. சம்பந்தர் இலையி னார்துலம் ஏறுஉகந்து ஏறி யேஇமை யோர்தொழ நிலையி னால்ஒரு கால்உறச் சிலையி னால்மதில் எய்தவன் அலையி னார்புனல் சூடிய அண்ண லார் அறை அணிநல்லூர் தலையி னால்தொழுது ஒங்குவார் நீங்கு வார்தடு மாற்றமே.