பக்கம்:திருத்தலப் பயணம்.pdf/252

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

222 திருத்தலப்பயணம் 228. இடையாறு இடையாற்றீசர்-சிற்றிடைநாயகி சுந்தரர் : 1. வழிபட்டநாள் : 8-9-57, 3-12-65. திருவெண்ணெய் நல்லூருக்கு வடமேற்கு 3 கல் அளவு. சைவசமய சந்தானகுரவர்களுள் ஒருவராகிய அருள் நந்தி சிவத்தின் சிடரும், உமாபதி சிவத்தின் குருவும் ஆகிய மறைஞானசம்பந்தர் பிறந்தது இத்தலம் என்பர். சுந்தரர் திங்களுர் திருவா திரையான் பட்டினமூர் நங்களூர் நறையூர் நனிநால் இசைநாலூர் தங்களூர் தமிழான் என்றுபா லிக்கவல்ல எங்களூர் எய்தமான் இடையாறு இடைமருதே. 229. திருவெண்ணெய்நல்லூர் தடுத்தாட்கொண்டநாதர்-வேல்கண்ணி சுந்தரர் : 1. வழிபட்டநாள் : 8-9-57, 3-12-65. விழுப்புரம்-திருச்சி குறுக்கு இருப்புப் பாதையில் உள்ள திருவெண்ணெய் நல்லூர் ரோடு என்னும் இரயில் நிலையத்திலிருந்து 4 கல்தொலைவு. பண்ணுருட்டிக்குமேற்குப் பதினைந்து மைல். விழுப்புரத்தினின்றும் 12 கல். திருக்கோவலூரிலிருந்து 14 மைல்.