பக்கம்:திருத்தலப் பயணம்.pdf/254

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

224 திருத்தலப்பயணம் 230. துறையூர் (திருத்தளுர்) பசுபதீசுரர்-பூங்கோதைநாயகி சுந்தரர் : 1. வழிபட்டநாள் : 26-6-58, 4-1-66, இரயில் நிலையம் பண்ணுருட்டியிலிருந்து வடமேற்கே சுமார் 6 மைல். சிவஞான சித்தியார் ஆசிரியரும், சைவசமய சந்தான குரவர்களுள் ஒருவரும் ஆகிய சகல ஆகம பண்டிதர் அருணந்தி சிவாசாரிய சுவாமிகள் பிறந்தருளிய தலம் இது. சிவன் கோவிலுக்கு எதிரில் அருள் நந்தி சிவத்துக்கு ஒரு மிகச் சிறிய கோவில் இருக்கிறது. இக்கோவில், சித்தியார் ஆசிரியர் பெருமைக்குச் சிறிதும் உகந்ததாக இல்லை. கோவில் நல்ல பராமரிப்பில் இல்லை. இது திருவாவடுதுறை ஆதீனத்தைச் சேர்ந்ததென்று சொல்லப்படுகிறது. சுந்தரர் மாவாய்ப் பிளந்தானும் மலர்மிசை யானும் ஆவா அவர்தேடித் திரிந்தல மந்தார் பூவார்ந்தன பொய்கைகள் சூழும் துறையூர்த் தேவா உனைவேண்டிக் கொள்வேன் தவநெறியே. 231. வடுகர் (ஆண்டார்கோயில்) வடுகேசுரர்-வடுவகிர்க்கண்ணி சம்பந்தர் : ! வழிபட்டநாள் : 8-9-57; 4-12-65. விழுப்புரம் புதுச்சேரி இருப்புப் பாதையிலுள்ள சின்னபாபு சமுத்திரம் இரயில் நிலையத்தினின்றும் மேற்கே 2 கல் தொலைவு. புதுக்சேரிக்கு மேற்கே 12 கல்.