பக்கம்:திருத்தலப் பயணம்.pdf/256

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

鹦等 திருத்தலப்பயணம் 238. திருப்பாதிரிப்புலியூர் தோன்றாத்துணைநாதர்-தோகையம்பிகை (பாடலீசுரர்-பெரியநாயகி) சம்பந்தர் : 1. அப்பர் : 1. வழிபட்டநாள் : 5-7-57, 3-12-65 இரயில் நிலையம்: அப்பர் சுவாமிகள் கல் தோணி உகைத்து நமச்சிவாயத் திருப்பதிகத்தை ஒதிக் கரை ஏறிய தலம். "பூந்திருப்பாதிரிப் புலியூர்ப் பாங்கரில்" அப்பர் கரையேறினார் என்று சேக்கிழாரடிகள் செப்புவர். தலத்தின் அணித்தே கடல் இருக்கின்றது. கரையேறவிட்ட குப்பம் என்று அங்கு ஒர் இடம் இருக்கிறது. இத்தலத்திற்குச் சிதம்பரநாத முனிவர் இயற்றிய தல புராணமும், தொல்காப்பிய முனிவர் என்பார் இயற்றிய கலம்பகமும் இருக்கின்றன. சம்பந்தர் ஆகநல்லார் அமுதுஆக்க உண்டான் அழல்ஐந்தலை நாகநல்லார் பரவந்நயந்து அங்குஅரை ஆர்த்தவன்; போகநல்லார் பயிலும் பாதிரிப் புலியூர்தனுள் பாகநல்லா ளொடும்நின்ற எம்பர மேட்டியே. அப்பர் மண்பா தலம்புக்கு மால்கடல் மூடிமற்று ஏழுலகும • . . ... •f :۹ ۹ ن؛ و اصه: مه - - விண்பால் திசைகெட்டு இருசுடர் வீழினும் , ஞ்சல்நெஞ்சே! திண்பால் நமக்குஒன்று கண்டோம் திருப்பா திரிப்புலியூர்க் கண்பாவு நெற்றிக் கடவுள் சுடரான் கழல்இணையே. சேக்கிழார் வாய்ந்தசிர் வருணனே வாக்கின் மன்னரைச் சேர்ந்துஅடை கருங்கலே சிவிகை ஆயிட ஏந்தியே கொண்டுஎழுந்து அருளு வித்தனன் பூந்திருப் பாதிரிப் புலியூர்ப் பாங்களில்,