பக்கம்:திருத்தலப் பயணம்.pdf/257

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நடு நாடு 227 234. திருமுண்டீச்சுரம் (முண்டீசர்-கானார்குழலி) (சிவலோகநாதர்-செல்வநாயகி) அப்பர் : 1. வழிபட்டநாள் : 8-9-57, 3-12-65 திருவெண்ணெய் நல்லூருக்குக் கிழக்கே 3 கல் தொலைவு. திருவெண்ணெய் நல்லூர் ரோடு இரயில் நிலையத்தினின்றும் திருவெண்ணெய் நல்லூர் செல்லும் வழியில் 1 மைல் அளவில் இத்தலம் இருக்கிறது. அப்பர் மூவன்காண் மூவர்க்கும் முதலா னான்காண்; முன்னுமாய்ப் பின்னுமாய் முடிவா னான்காண்; காவன்காண்; உலகுக்கோர் கண்ணா னான்காண்; கங்காளன் காண்கயிலை மலையி னான்காண்; ஆவன்காண் ஆவகத்துஅஞ்சு ஆடி னான்காண் ஆர்அழலாய் அயற்குஅரிக்கும் அறிய ஒண்ணாத் தேவன்காண் திருமூண்டிச் சரத்துமேய சிவலோகன் காண்: அவன்என் சிந்தை யானே. 235. புறவார்பனங்காட்டுர் (பனையபுரம்) பனங்காட்டீசர்-புறவம்மை சம்பந்தர் : 1. வழிபட்டநாள் : 8-9-57; 4-12-65. விழுப்புரம் இ ரயில் நிலையத்திற்கு வடக்கே 5% கல் தொலைவு. முண்டியம்பாக்கம் இரயில் நிலையத்தினின்றும் வடகிழக்கே2கல்அளவு. இங்கு இரண்டுபழைய பனைமரங்கள் இருக்கின்றன.