பக்கம்:திருத்தலப் பயணம்.pdf/260

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

있30 திருத்தலப்பயணம் "விளவார்கனி படநூறிய கடல்வண்ணனும் வேதக் கிளர்தாமரை மலர்மேலுறை கேடில்புக ழோனும் அளவாவணம் அழலாகிய அண்ணாமலை அண்ணல்" என்பது தேவாரம். அண்ணாமலையார் கோயில் மலையின் அடிவாரத்தில் இருக்கின்றது. திருக்கார்த்திகை விழா இங்குப் பெருஞ் சிறப்பாக நடைபெறுகின்றது. மலையின் உச்சியில் பேரொளியுடன் கூடிய விளக்கு ஏற்றப்படுகின்றது. 'அண்ணாமலை திபம்' என்றே அதற்குப் பெயர். அருணகிரிநாதர் வாழ்ந்த ஊர் திருவண்ணாமலையே ஆகும். சில ஆண்டுகளாக இத்தலத்தில் அருணகிரியாருக்கு ஆகஸ்டுப் பதினைந்தாம் நாளில் பெருவிழா எடுக்கின்றனர். இத்தலத்தில் ஏராளமான சத்திரங்களும் விடுதிகளும் இருக்கின்றன. நாட்டுக்கோட்டை நகரத்தார் இங்கு நிறைந்த அறங்கள் செய்திருக்கின்றனர். இத்தலம் திருவாசகப் பெருமையும் பெற்றிருக்கின்றது. திருவாசகம் திருவண்ணாமலையை 3 இடங்களில் குறிப்பிடுகின்றது. திருவெம்பாவை இத்தலத்திலேயே எழுந்தது என்று கூறுப. இத்தலத்துக்கு அண்ணாமலை வெண்பா என்னும் பெயருடன் ஒர் அரிய நூலைகுருநமச்சிவாயப் புலவர் இயற்றியிருக்கின்றார். மலைச் சுற்றில் அணி அண்ணாமலை என்ற ஒரு சிவன் கோவில் இருக்கின்றது. குகைநமச்சிவாயர், குருநமச்சிவாயர், ஈசான ஞான தேசிகர், குன்றக்குடியில் திருவண்ணாமலை ஆதின மடாலயத்தைக் கண்டதெய்வசிகாமணிதேசிகர். ரமண மகரிஷிகள் முதலிய ஞானச் செல்வர்கள் இப்பதியில் வாழ்ந்தனர். சம்பந்தர் தேடிக் காணார் திருமால் பிரமன் தேவர் பெருமானை மூடிஓங்கி முதுவேய் உகுத்த முத்தம் பலகொண்டு கூடிக் குறவர் மடவார். குவித்துக் கொள்ள வம்மின்என்று ஆடிப் பாடி அளக்கும் சாரல் அண்ணா மலையாரே.