பக்கம்:திருத்தலப் பயணம்.pdf/261

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நடு நாடு 231 அப்பர் பைம்பொனே! பவளக் குன்றே! பரமனே! பால்வெண் நீறா! செம்பொனே! மலர்செய் பாதா! சீர்தரு மணியே! மிக்க அம்பொனே கொழித்து வீழும் அணி.அணா மலையு ளானே! எம்பொனே! உன்னை அல்லால் ஏதுநான் நினைவி லேனே. மணிவாசகர் விண் ஆளும் தேவர்க்கும் மேலான வேதியனை, மண் ஆளும் மன்னவர்க்கும் மாண்பாகி நின்றானை. தண்ஆர் தமிழ்அளிக்கும் தண்பாண்டி நாட்டானை, பெண் ஆளும் பாகனைப் பேணு பெருந்துறையில் கண்ஆர் கழல்காட்டி நாயேனை ஆட்கொண்ட அண்ணா மலையானைப் பாடுதும்காண் அம்மானாய் ! சேக்கிழார் அண்ணா மலைமேல் அணிமலையை ஆரா அன்பின் அடியவர்தம் கண்ணார் அமுதை விண்ணோரைக் காக்கக் கடலில் வந்துஎழுந்த உண்ணா நஞ்சம் உண்டானைக் கும்பிட்டு உருகும் சிந்தையுடன் பண்ணார் பதிகத் தமிழ்பாடிப் பணிந்து பரவிப் பணிசெய்தார். வில்லிபுத்துனர் ஆழ்வர் பெற்றாள்சகத்து அண்டங்கள் அனைத்தும்.அவைபெற்றும் முற்றாமுகிழ் முலையாளொடு முக்கண்ணர் விரும்பும் பற்றாம்என மிக்கோர் இகழ் பற்றுஒன்றினும் உண்மை கற்றார்தொழும் அருணாசலம் அன்போடுகை தொழுதான். குருநமச்சிவாயர் கண்டம் கரியமலை கண்மூன்று உடையமலை, அண்டர்எலாம் போற்றற்கு அரியமலை-தொண்டருக்குத் தோற்றுமலை நாளும் தொழுவோர் எழுபிறப்பை மாற்றுமலை அண்ணா மலை. -அண்ணாமலை வெண்பா