பக்கம்:திருத்தலப் பயணம்.pdf/262

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

232 திருத்தலப்பயணம் சைவ எல்லப்ப நாவலர் ஒருமானைக் கரத்தினில்வைத்து. ஒருமானைச் சிரத்தினில்வைத்து, உலகம் ஏழும் தருமானை இடத்தினில்வைத்து. அருள்வானைப் பவளநெடும் சயிலம் போல வரும்ஆனை முகத்தானை அளித்தானைப் பெரும்ஆனை மகிழ ஏறும் பெருமானை. அருணகிரிப் பெம்மானை அடிபணிந்து பிறவி திர்ப்பாம். சைவளல்லப்ப நாவலர் கார்ஒழுகும் குழலாளை. கருணைவழிந்து ஒழுகும்.இரு கடைக்கண் ணாளை. மூரல்இள நிலவுஒழுக, புழுகுஒழுக, அழகுஒழுகும் முகத்தி னாளை, வார்ஒழுகும் தனத்தாளை, வடிவுஒழுகித் தெரியாத மருங்கு லாளை, சிர்ஒழுகும் பதத்தாளை. அருணைஉண்ணா -முலையாளை, சிந்தை சேர்ப்பாம், (அருணாசலப்புராணம்) இராமலிங்க சுவாமிகள் தேடுவார் தேடும் செல்வமே! சிவமே! திருஅரு ணாபுரித் தேவே! ஏடுவார் இதழிக் கண்ணிளங் கோவே! எந்தையே! எம்பெரு மானே! பாடுவார்க்கு அளிக்கும் பரம்பரப் பொருளே! பாவியேன் பொய்எலாம் பொறுத்து நாடுவார் புகழும் நின்திருக் கோயில் நண்ணுமா எனக்குஇவண் அருளே.