பக்கம்:திருத்தலப் பயணம்.pdf/264

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

238. கச்சிஏகம்பம் (காஞ்சிபுரம்) ஏகாம்பரநாதர் சம்பந்தர் : 4 அப்பர் : 7 சுந்தரர் : 1. வழிபட்டநாள் ; 11-9-57, 22-1-66. இரயில் நிலையம்: மிகப் பழமையான பதி, காஞ்சி நகரத்தில் கச்சி ஏகம்பம், கச்சி அநேகதங்காபதம், கச்சி மேற்றளி, கச்சி நெறிக் காரைக் காடு, ஒனகாந்தன் தளி, எனத் தேவாரம் பெற்ற சிவன் கோவில் 5 இருக்கின்றன. இவ்வைந்து கோயில்களிலும் இறைவி சந்நிதி இல்லை. அந்த நாளில் சிவன் கோவிலில் அம்பிகை சந்நிதி அமைப்பதில்லை என்பதற்கு எடுத்துக்காட்டாக விளங்குகின்றது காஞ்சிக் கோவில்கள். காஞ்சியில் காமாட்சி அம்மனுக்கு ஒரு தனிக் கோவில் இருக்கிறது. அங்கு இறைவன் திருவுருவம் இல்லை. காமாட்சி அம்மனுக்கு அறம்வளர்த்த நாயகி என்றொரு பெயர். 32 அறங்களையும் வளர்த்தாள் அம்பிகை என்பது கருத்து. பாடற் சிவன் கோவில்கள் தவிர மேலும் பல பழமையான சிற்பக்கலை மல்கிய கைலாசநாதர் கோவில் போன்ற சிவன் கோவில்களும் இருக்கின்றன. திவ்வியப் பிரபந்தம் பெற்ற திருமால் கோவில் காஞ்சி நகர எல்லைக்குள் 14 இருக்கின்றன. முருகனுக்கு ஒரு தனிக் கோவில், அதற்குக் குமர கோட்டம் என்று பெயர். ஏகாம்பர நாதர் கோவிலுக்குள்ளேயே கச்சி மயானம், என்ற ஒரு தேவார வைப்புக் கோவிலும் இருக்கின்றது.