பக்கம்:திருத்தலப் பயணம்.pdf/266

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொண்டைநாடு 237 சுந்தரர் வெல்லு வெண்மழு ஒன்றுடை யானை, வேலை நஞ்சுண்ட வித்தகன் தன்னை. அல்லல் திர்த்து அருள் செய்யவல் லானை, அரும றையவை அங்கம்வல் லானை, அந்த மில்புக ழான்உமை நங்கை ஆதரித்து வழிபடப் பெற்ற கந்த வார்சடைக் கம்பன்எம் மானைக் காணக் கண்அடி யேன்பெற்ற வாறே. மணிவாசகர் ஈர்.அம்பு கண்டிலம் ஏகம்பர் தன்கையில் ஒர்.அம்பே முப்புறம் உந்திபற! ஒன்றும் பெருமிகை உந்திபற! ஐயடிகள் காடவர்கோன் நாயனார் என்நெஞ்சே! உன்னை இரந்தும் உரைக்கின்றேன் கன்னம்செய் வாய்ஆகில் காலத்தால் வன்னெஞ்சே! மாகம்பத்து ஆனை உரித்தானை, வண்கச்சி ஏகம்பத் தானை இறைஞ்சு. பட்டினத்துப் பிள்ளையார் மெய்த்தொண்டர் செல்லும் நெறிஅறி. யேன்.மிக நற்பணிசெய் கைத்தொண்டர் தம்மிலும் நல்தொண் டுவந்திலன், உண்பதற்கே பொய்த்தொண்டு பேசிப் புறம்புற மேஉன்னைப் போற்றுகின்ற இத்தொண்ட னேன்பணி கொள்ளுதி யோகச்சி ஏகம்பனே! சேக்கிழார் திருவா யிலினைப் பணிந்துஎழுந்து. செல்வத் திருமுன் றிலைஅணைந்து. கருவார் கச்சி ஏகம்பர் கனக மணிமா எளிகைது.ழ்ந்து. வருவார் செம்பொன் மலைவல்லி தழுவக் குழைந்த மணிமேனிப் பெருவாழ் வினைமுன் கண்டு இறைஞ்சிப் பேரா அன்பு பெருக்கினார்.