பக்கம்:திருத்தலப் பயணம்.pdf/267

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

238 திருத்தலப்பயணம் "விண் ஆள்வார் அமுதுஉண்ண மிக்கபெரு விடம்உண்ட கண்ணாளா! கச்சிஏ கம்பனே! கடையானேன் எண்ணாத பிழைபொறுத்திங்கு யான்காண எழிற்பவள வண்ணாகண் அளித்து அருளாய்" எனவீழ்ந்து வணங்கினார். வில்லிபுத்துளர் ஆழ்வார் இச்சைப்படி தன்பேர்.அறம் எண் நான்கும் வளர்க்கும் பச்சைக்கொடி விடையோன்ஒரு பாகம்திறை கொண்டாள் செச்சைத்தொடை இளையோன்நுகர் திம்பால்மனம் தாறும் கச்சைப்பொரு முலையாள் உறை கச்சிப்பதி கண்டான். 239. கச்சிமேல்தளி (காஞ்சிபுரம்) திருமேற்றளிநாதர் அப்பர் : 1. சுந்தரர் : 1. வழிபட்டநாள் : 12-9-57, 24-1-66 இக்கோவில் காஞ்சிநகரத்தின் மேற்குப்பகுதியாகிய பிள்ளைப் பாளையத்தில் இருக்கின்றது. அப்பர் மண்ணினை உண்ட மாயன் தன்னையோர் பாகம் கொண்டார்; பண்ணினைப் பாடி ஆடும் பத்தர்கள் சித்தம் கொண்டார்; கண்ணினை மூன்றும் கொண்டார்: காஞ்சிமா நகர்தன் உள்ளால், எண்ணினை எண்ண வைத்தார் இலங்குமேற் றளிய னாரே.