பக்கம்:திருத்தலப் பயணம்.pdf/268

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொண்டை நாடு 239 சுந்தரர் பாரூர் பல்லவனுசர் மதில்காஞ்சி மாநகர்வாய்ச் சிர்ஊ ரும்புறவில் திருமேற் றளிச்சிவனை ஆரூ ரன்அடியான் அடித்தொண்டன்ஆ ரூரன்சொன்ன சிரூர் பாடவல்லார் சிவலோகம் சேர்வாரே. 240. ஒனகாந்தன்தளி (காஞ்சிபுரம்) ஒணகாந்தேகரர் சுந்தரர் : 1. வழிபட்டநாள் : 12-9-57, 24-1-66. இக்கோவில் காஞ்சி நகரத்திற்கு மேற்கில் உள்ள சர்வதிர்த்தத்திற்கு வடக்கில் ஏகாம்பரர் கோவிலுக்கு மேற்கே % மைலில் இருக்கிறது. ஒனன். காந்தன் என்னும் இரண்டு அசுரர்கள் வழிபட்ட தலம் என்ப. சுந்தரர் பொய்ம்மை யாலே போது போக்கிப் புறத்தும் இல்லை.அகத்தும் இல்லை; மெய்ம்மை சொல்லி ஆள மாட்டீர் மேலை நாள் ஒன்று இடவுங் கில்லீர் எம்மைப் பெற்றால் ஏதும் வேண்டீர் ஏதும் தாரீர்! ஏதும் ஒதீர்! உம்மை என்றே எம்பெ ருமான் ஒண காந்தன் தளியு ளீரே.