பக்கம்:திருத்தலப் பயணம்.pdf/269

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

240 திருத்தலப்பயணம் 241. கச்சிஅனேகதங்காபதம் (காஞ்சிபுரம்) அனேகதங்காபதேசுரர் சுந்தரர் : 1. வழிபட்டநாள் : 12-9-57, 23-1-66. இக்கோவில் காஞ்சி நகரத்தின் வடமேற்கில் வயல் வெளியில் இருக்கின்றது. சுந்தரர் தண்ட முடைத்தரு மன்தமர் என்தம ரைச்செயும் வன்துயர் திர்க்கும்.இடம் பிண்ட முடைப்பிற வித்தலை நின்று நினைப்பவர் ஆக்கையை நீக்கும்இடம் கண்ட முடைக்கரு நஞ்சை நுகர்ந்த பிரானது இடம்,கடல் ஏழுகடந்து அண்ட முடைப்பெரு மானது இடம்கலிக் கச்சி அனேகதங் காவத்மே. 242. கச்சிநெறிக்காரைக்காடு (காஞ்சிபுரம்) காரைத்திருநாதர் சம்பந்தர் : 1. வழிபட்டதாள் : 11-9-57, 23-1-66. காஞ்சிபுரத்தின் வடகிழக்கில் கொல்லை வெளியில் இக்கோவில் இருக்கிறது. திருக்காளிசுவரன் கோவில் என்று இக்கோவில் வழங்கப் பெறுகின்றது. காரைச் செடிகள் மிகுந்திருத்தலினால் இப் பெயர் பெற்றது என்ப.