பக்கம்:திருத்தலப் பயணம்.pdf/270

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொண்டைநாடு 24i. சம்பந்தர் பன்மலர்கள் கொண்டு அடிக்கிழ் வானோர்கள் பணிந்துஇறைஞ்ச நன்மையிலா வல்அவுணர் நகர்மூன்றும் ஒருநொடியில் வில்மலையின் நாண்கொளுவி வெங்கணையால் எய்துஅழித்த நின்மலனார் கலிக்கச்சி நெறிக்காரைக் காட்டாரே. 243. குரங்கணில்முட்டம் வாலீசர்-இறையார்வளையாள் சம்பந்தர் : 1. வழிபட்டநாள் : 9-2-58, 24-1-66 காஞ்சிபுரத்திற்குத் தெற்கு 6 கல் தொலைவில் பாலாற்றின் தென் கரையைத் தாண்டி இத்தலம் இருக்கிறது. துளசி என்ற ஊருக்குத் தென்கிழக்கே 1 கல் தொலைவு. குரங்கும் அணிலும் காக்கையும் வழிபட்ட தலம் இஃதென்ப. முட்டம் : காக்கை. சம்பந்தர் விழுநீர்மழு வாள்படை அண்ணல் விளங்கும் கழுநீர்குவ ளைம்மல ரக்கயல் பாயும் கொழுநீர்வயல் சூழ்ந்த குரங்கணில் முட்டம் தொழு நீர்மையர் தீதுறு துன்பம் இலரே. 244. மாகறல் அடைக்கலங்காத்தநாதர்-புவனநாயகி சம்பந்தர் : 1. வழிபட்டநாள் : 1.3-9-57, 24-1-66. காஞ்சிக்குத் தெற்கே 10 கல் தொலைவு. வழியில் வேகவதி ஆற்றையும் பாலாற்றையும் கடத்தல் வேண்டும்.