பக்கம்:திருத்தலப் பயணம்.pdf/271

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

242 திருத்தலப்பயணம் சம்பந்தர் இங்குகதிர் முத்தினொடு பொன்மணிகள் உந்திஎழில் மெய்யுளுடனே மங்கையரும். மைந்தர்களும் மன்னுடினல் ஆடிமகிழ் மாகறல் உளான்; கொங்குவளர் கொன்றைகுளிர் திங்கள்அணி செங்சடையி னான்.அடியையே நுங்கள்வினை திர,மிக ஏத்திவழி-பாடு நுகரா எழுமினே. 245. திருஒத்துTர் வேதநாதர்-இளமுலைநாயகி சம்பந்தர் : 1 வழிபட்டநாள் : 12-9-57, 24-1-66. காஞ்சிக்குத்தென்மேற்கு 19 கல்தொலைவு. மூன்றாவது மைலில் பாலாற்றைக் கடக்க வேண்டும். நல்ல சாலை. கோயிலுக்கு அணித்தே சேயாறு ஒடுகின்றது. கோயில் பெரிது. கோயில் வெளிச் சுற்றில் 4, 5 பனை மரங்கள் இருக்கின்றன. இது ஆண்பனை, பெண்பனையான தலம். நந்தி கிழக்கு நோக்கி இருக்கிறது. கோவிலுக்குள் ஆதிகேசவப் பெருமாள் சந்நிதி ஒன்று இருக்கிறது. ஒத்து என்றால்வேதம் கடவுள்வேதத்திற்குப்பொருள் சொன்ன இடம் இஃதென்ப. கருணாகரக் கவிராயர் என்பார் இத்தலத்திற்கு ஒரு புராணம் பாடியுள்ளார். சம்பந்தர் இடையீர் போகா இளைமுலை யாளைஓர் புடையீ ரே!புள்ளி மான்உரி உடையீ ரே! உம்மை ஏத்துதும் ஒத்தூர்ச் சடையீ ரேஉம் தாளே.