பக்கம்:திருத்தலப் பயணம்.pdf/272

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொண்டைநாடு 243 246. திருப்பனங்காட்டுர் (வன்பாத்தான்பனங்காட்டுர்) (திருப்பனங்காடு) பனங்காட்டீசர்-அமுதவல்லி சுந்தரர் : 1. வழிபட்டநாள் : 1.3-9-57, 24-1-66. காஞ்சிக்குத் தெற்கில் 4 மைல் சென்று ஐயன்குளம் என்னும் ஊரைச் சேர்ந்து, அவ் இடத்தினின்றும் மேற்கே ஆற்காட்டுக்குச் செல்லும் வழியில் 3%கல் தூரம் சென்று அங்கிருந்து வடக்கே திரும்பி 1மைல்சென்றால் இத்தலத்தை அடையலாம். இடையில் வேகவதி ஆற்றையும் பாலாற்றையுந் தாண்ட வேண்டும். கோவிலில் இரண்டு சந்நிதிகள் இருக்கின்றன. இரண்டு பனைமரங்களும் இருக்கின்றன. சுந்தரர் நெற்றிக்கண் உடையானை, நீறுஏறும் திருமேனிக் குற்றமில் குணத்தானைக் கோணாதார் மனத்தானை, பற்றிபாம்பு அரைஆர்த்த படிறன்தன் பனங்காட்டுர்ப் பெற்றோன்றுஏ றும்பிரானைப் பேசாதார் பேச்சென்னே. 247. திருவல்லம் (திருவலம்) வல்லநாதர்-வல்லாம்பிகை சம்பந்தர் : 1. வழிபட்டநாள் : 3-12-57, 5-12-65 சென்னை-காட்பாடி இருப்புப் பாதையில் திருவலம் என்னும் இரயில் நிலையத்தினின்றும், 2 கல் தொலைவில் "நீவா" என்னும் ஆற்றின் மேல் கரையில் கோவிலிருக்கிறது. காட்பாடியிலிருந்து சுமார் 6 கல் தொலைவு. வல்லத்துக்கு வடக்கே 8 மைலில் வள்ளிமலை என்னும் சிறந்த முருகன் தலம் இருக்கிறது.