பக்கம்:திருத்தலப் பயணம்.pdf/273

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

244 திருத்தலப்பயணம் சம்பந்தர் சார்ந்தவர்க்கு இன்பங்கள் தழைக்கும் வண்ணம் நேர்ந்தவன் நேரிழை யோடும் கூடித் தேர்ந்தவர் தேடுவார் தேடச் செய்தே சேர்ந்தவன் உறைவிடம் திருவல் லம்மே. 248. திருமாற்பேறு மால்வணங்கிசர்-கருணைநாயகி சம்பந்தர் : 2 அப்பர் : 4. வழிபட்டநாள் : 8-2-58, 25-1-66. செங்கற்பட்டு-அரக்கோணம் இருப்புப் பாதையிலுள்ள திருமால்பேறு என்னும் இரயில் நிலையத்திற்குத் தென்மேற்கு இரண்டரை கல் தொலைவு. காஞ்சியினின்றும் வடமேற்கே ஏழு கல் அளவில் இத்தலமிருக்கிறது. இது திருமால் சிவ பெருமானை வழிபட்டுப் பேறுபெற்ற தலம் என்ப. சம்பந்தர் தலையவன் தலையணி மாலைபூண்டு கொலைநவில் கூற்றினைக் கொன்றுஉகந்தான் கலைநவின் றான்கயி லாயம்என்னும் - மலையவன் வளநகர் மாற்பேறே. அப்பர் பிறப்பானை, பிறவாத பெருமை யானை, பெரியானை. அரியானை, பெண் ஆண் ஆய நிறத்தானை. நின்மலனை நினையா தாரை நினையானை, நினைவோரை நினைவோன் தன்னை. அறத்தானை. அறவோனை, ஐயன் தன்னை. அண்ணல்தனை. நண்ணரிய அமரர் ஏத்தும் திறத்தானை, திகழ்ஒளியை, திருமாற் பேற்றுஎம் செம்பவளக் குன்றினைச் சென்று அடைந்தேன்நானே.