பக்கம்:திருத்தலப் பயணம்.pdf/274

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொண்டைநாடு 245 249. திருஊறல் (தக்கோலம்) உமாபதிசுரர்-உமையம்மை சம்பந்தர் : 1. வழிபட்டநாள் : 10-9-57, 25-1-88. செங்கற்பட்டு-அரக்கோணம் இருப்புப் பாதையிலுள்ள தக்கோலம் எனும் இரயில் நிலையத்திலிருந்து கிழக்கே மூன்று கல் தொலைவு. இக்கோயிலுக்குப் பக்கத்தில் ஒரு நந்தியின் வாயினின்றும் எப்பொழுதும் நீர் விழுந்து கொண்டிருப்பதால் இத்தலத்திற்குத் திருவூறல் என்று பெயர். இங்கு, தட்சிணா மூர்த்தியின் வடிவம் தனிச்சிறப்புடைத்து. சம்பந்தர் மாறில் அவுனர்அரனம்.அவை மாயஓர் வெம்கனை யால்அன்று நீறுஎழ எய்த எங்கள் நிமலன் இடம்வி னவ்வில் தேறல் இரும்பொழி லும்திகழ் செங்கயல் பாய்வய லுமிது.ழ்ந்த ஊறல் அமர்ந்த பிரான்ஒலி யார்கழல் உள்கு தும்மே. 250. இலம்பையங்கோட்டுர் சந்திரசேகரர்-கோடேந்துமுலையாள் சம்பந்தர் : 1. வழிபட்டநாள் : 10-9-57, 25-1-66 திருவிற்கோலமாகிய கூவம் என்ற தலத்திற்குத் தென் மேற்கே 1% கல் அளவு. கூவம் ஏரியில் நீரில்லாவிட்டால் தான் இவ்வழிசெல்ல முடியும். ஏரியில் நீரிருந்தால் ஏரிக் கரையின் மேல் ஒருமைல்மேற்கே சென்று,பின் தெற்கே திரும்பி,ஏரியின் மேற்புறமாக 1% மைல் சென்றால் இத்தலத்தை அடையலாம். வழி செம்மையாக இல்லை.