பக்கம்:திருத்தலப் பயணம்.pdf/275

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

246 திருத்தலப்பயணம் சம்பந்தர் நீருளான்.தியுளான் அந்தரத் துள்ளான் நினைப்பவர் மனத்துளான்.நித்தமா ஏத்தும் ஊருளான்.எனதுஉரை தனதுஉரை யாக ஒற்றைவெள் ஏறுஉகந்து ஏறிய ஒருவன். பாருளார்பாடலோடு ஆடல் அறாத பண்முரன்று அஞ்சிறை வண்டினம் பாடும் ஏருளார் பைம்பொழில் இலம்பையங் கோட்டுர் இருக்கையாப் பேணி.என் எழில்கொள்வது இயல்பே. 251. திருவிற்கோலம் (கூவம்) திரிபுராந்தகர்-திரிபுராந்தகி சம்பந்தர் : 1. வழிபட்டநாள் : 25-11-56, 25-1-66 சென்னை-அரக்கோணம் இருப்புப்பாதையில் திருவள்ளுரை அடுத்த கடம்பத்துார் என்னும் இரயில் நிலையத் தினின்றும் தெற்கே 6 கல் தொலைவு. சென்னையினின்றும் திருவள்ளூர் வழி. கார்ப்பாதை 45 மைல். இலம்பையங் கோட்டுர் இதற்கு அண்மையிலிருக்கிறது. விற்கோலத்திற்குச் சிவப்பிராகாச சுவாமிகள் புராணம் பாடியுள்ளார்கள். சம்பந்தர் ஐயன்நல் அதிசயன் அயன்விண் ணோர்தொழும் மையணி கண்டனார் வண்ண வண்ணம்வான் பையரவு அல்குலாள் பாகம் ஆகவும் செய்யவன் உறைவிடம் திருவரிற் கோலமே.