பக்கம்:திருத்தலப் பயணம்.pdf/276

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொண்டைநாடு 翌4了 252. திருவாலங்காடு (பழையனுர்-ஆலங்காடு) ஊர்த்துவதாண்டவப்பெருமான்-வண்டார்குழலி சம்பந்தர் : அப்பர் : 2 கந்தரர் : . வழிபட்டநாள் : 10-2-58, 26-66, சென்னை-அரக்கோணம் இருப்புப் பாதையிலுள்ள திருவாலங்காடு என்னும் இரகசில் நிலையத்தினின்றும் வட கிழக்கே 3 மைலில் இத்தலம் இருக்கிறது. இடையில் ஒரு சிற்றாறு ஒடுகிறது. சென்னையினின்றும் திருத்தனி செல்லும் வழியில் திருவள்ளுர், திருப்பாசூர் முதலிய ஊர்களைக் கடந்து காரில் சென்றால் 40 கல் தொலைவு. கோவில் மிகப்பெரியது. பஞ்ச சபைகளில் ஒன்றாகிய இரத்தின சபையை உடைய தலம் இது. காளியோடு ஆடிய கூத்தப் பெருமான் இங்கு ஊர்த்துவத் தாண்டவத்தில் அருமையாகக் காட்சி அளிக்கிறார், ஊர்த்துவம் என்பது ஒரு காலை மேலே தூக்கிய நிலை. "அண்டம் உற நிமிர்ந்து ஆடும் அடி" என்று குறிப்பார் ஊர்த்துவத் தாண்டவத்தை உமாபதிசிவம். காரைக்காலம்மையார் தலையால் நடந்து அருளிய திருப்பதி இது. இத்தலத்தில் காரைக்காலம்மையார் பெரிதும் சிறப்பிக்கப் பெறுகின்றார். அம்மையார் திருவுருவம் இக்கோயிலில் இருக்கின்றது. பழையனுர் நீலி கதை நடந்தது இத்தலத்தில், பழையனூர் நீலியின் செயலால் தாங்கள் கொடுத்த வாக்கைக் காக்க வேளாளர் எழுபதின்மர் திக்குளித்த இடம் இக் கோவிலுக்கு அண்மையில் இருக்கின்றது. அங்கு ஒரு சிறு சிவன் கோவிலும் திக்குளித்த வரலாறும் காட்டப் பெற்றிருக்கின்றன. சம்பந்தர் துஞ்ச வருவாரும் தொழுவிப் பாரும் வழுவிப்போய் நெஞ்சம் புகுந்துஎன்னை நினைவிப் பாரும் முனைநட்பாய் வஞ்சப் படுத்துஒருத்தி வாழ்நாள் கொள்ளும் வகைகேட்டு அஞ்சும் பழையனுர் ஆலங் காட்டுஎம் அடிகளே.