பக்கம்:திருத்தலப் பயணம்.pdf/278

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொண்டைநாடு 249 253. திருப்பாதுர் பாதுர்நாதர்-பசுபதிநாயகி சம்பந்தர் : ! அப்பர் : 2. வழிபட்டநாள் : 23-4-56; 26–1–65. சென்னைக்கு மேற்கே 26 கல் தொலைவிலுள்ள திருஎவ்வளூர் என்னும் தலத்திற்கு வடமேற்கே 4% கல் தொலைவு. இங்கு சிவபெருமான் மூங்கிலில் தோன்றியதாக ஐதிகம். பாசு:மூங்கில். இத்தலத்தில் விநாயகர் திருவுருவங்கள் நிறைய இருக்கின்றன. சம்பந்தர் கண்ணின் அயலே கண்ஒன்று உடையார் கழல்உன்னி எண்ணும் தனையும் அடியார் ஏத்த அருள்செய்வார்: உள்நின்று உருக உவகை தருவார் ஊர்போலும் பண்ணின் மொழியார் பாடல் ஓவாப் பாதுரே. அப்பர் சாம்பல் பூசுவர் தாழ்சடை கட்டுவர்: ஒம்பல் மூதுஎருது ஏறும் ஒருவனார் தேம்பல் வெண்மதி சூடுவர்தியதோர் பாம்பும் ஆட்டுவர் பாதுர் அடிகளே. 254. திருவெண்பாக்கம் வெண்பாக்கநாதர்-கனிவாய்மொழி சுந்தரர் : 1. வழிபட்டநாள் : 10-9-57, 26-1-66. சென்னையினின்றும் மேற்கே 26 கல் தொலைவிலுள்ள திரு எவ்வளுரைக் கடந்து, அங்கிருந்து மேற்கே திருப்பாதுருக்குச்