பக்கம்:திருத்தலப் பயணம்.pdf/279

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

있50 திருத்தலப்பயணம் செல்லும் பாதையில் போய், அங்கிருந்து வடக்கே திரும்பி, பூண்டி நீர்த்தேக்கத்தை அடையவேண்டும். இத்தலத்தில்தான் கண்ணிழந்த சுந்தரர் ஊன்றுகோல் பெற்றார். பழைய கோவில் பூண்டி நீர் நிலைக்குள் மூழ்கிவிட்டது. கோவிலின் உச்சி இன்றும் தெரிகின்றது. நீர்த் தேக்கக் கரையில் புதிய கோவிலொன்று கட்டப் பெற்று வருகின்றது. இன்னும் அது முடிவடையவில்லை. பழையகோவிலில் இருந்தவிக்கிரகங்கள் வேறு இடத்திற்கு மாற்றப் பெற்றுள்ளன. சுந்தரர் பிழையுளன பொறுத்திடுவர் என்றுஅடியேன்.பிழைத்தக்கால் பழியதனைப் பாராதே படலம்என்கண் மறைப்பித்தாய், குழைவிரவு வடிகாதா! கோயிலுளா யே.என்ன, உழைஉடையான் உள்ளிருந்து "உளம்போகிர்" என்றானே. 255. திருக்கள்ளில் (திருக்கள்ளம்-திருக்கண்டலம்) சிவாநந்தேகரர்-ஆநந்தவல்லி சம்பந்தர் : 1 வழிபட்டநாள் : 11-2-58, 30-1-66. சென்னையினின்றும் திருக்காளத்தி செல்லும் வழியில், 16 மைலிலுள்ள, பெரிய பாளையத்துக்குச் சிறிது முன்னர் இடது பக்கம் திரும்பிநான்குமைல்சென்று, கன்னிப்புத்துர் வழியாக மேலும் இரண்டு மைல் சென்றால் இத்தலத்தை அடையலாம். சென்னையினின்றும் மொத்தம் 22 கல் தொலைவு. சம்பந்தர் முள்ளின்மேல் முதுகூகை முரலும்சோலை வெள்ளின்மேல் விடுகூறைக் கொடிவி ளைந்த கள்ளின் மேய அண்ணல் கழல்கள்நாளும் உள்ளு மேல்உயர்வு எய்தல் ஒருதலையே.