பக்கம்:திருத்தலப் பயணம்.pdf/281

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

252 திருத்தலப்பயணம் சம்பந்தர் சந்தமார் அகிலொடு சாதிதேக் கம்மரம் உந்துமா முகலியின் கரையினில், உமையொடும் மந்தமார் பொழில்வளர் மல்குவண் காளத்தி எந்தையார் இணையடி என்மனத்து உள்ளவே. அப்பர் நாரணன்காண் நான்முகன்காண் நால்வே தன்காண்; ஞானப் பெருங்கடற்குஓர் நாவாய் அன்ன. பூரணன்காண் புண்ணியன்காண் புராணன் தான்காண்; புரிசடைமேல் புனல்ஏற்ற புனிதன் தான்காண்; சாரணன்காண் சந்திரன்காண் கதிரோன் தான்காண்; தன்மைக்கண் தானேகாண் தக்கோர்க்கு எல்லாம் காரணன்காண் காளத்தி காணப் பட்ட கனநாதன் காண்iஅவன்என் கண்ணு ளானே. சுந்தரர் பொய்யவன் நாயடியேன் புகவேநெறி ஒன்றுஅறியேன் செய்யவன் ஆகிவந்துஇங்கு இடர்ஆனவை திர்த்தவனே! மெய்யவ னே!திருவே! விளங்கும்திருக் காளத்திஎன் ஐயதுன் தனைஅல்லால் அறிந்துஏத்த மாட்டேனே. நக்கிரதேவ நாயனார் பிறப்புடையர் கற்றோர் பெருஞ்செல்வர் மற்றும் சிறப்புடையர் ஆனாலும் சிசி-இறப்பில் கடியார் நறுஞ்சோலைக் காளத்தி ஆள்வார் அடியாரைப் பேணா தவர். சேக்கிழார் மாகமார் திருக்கா ளத்தி மலைஎழு கொழுந்தாய் உள்ள ஏகநா யகரைக் கண்டார் எழுந்தபேர் உவகை அன்பின் வேகமா னதுமேல் செல்ல மிக்கதோர் விரைவி னோடும் மோகமாய் ஒடிச் சென்றார் தழுவினார் மோந்து நின்றார்.