பக்கம்:திருத்தலப் பயணம்.pdf/282

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொண்டைநாடு 253 பட்டினத்து அடிகள் வாளால் மகவுஅரிந்து ஊட்டவல் -லேன் அல்லன் மாதுசொன்ன சூளால் இளமை துறக்கவல் -லேன் அல்லன் தொண்டுசெய்து நாள் ஆறில் கண்இடந்து அப்பவல் -லேன் அல்லன் நான் இனிச்சென்று ஆளாவது எப்படி யோ!திருக் காளத்தி அப்பருக்கே. 257. திருஒற்றியூர் மாணிக்கத்தியாகர்-வடிவுடையம்மை சம்பந்தர் : 1. அப்பர் : 5. சுந்தரர் : 2. வழிபட்டநாள் : 17-4-56, 22-1-66 இரயில் நிலையம். சென்னை நகரத்துக்கு வடக்கே 5 கல் தொலைவு. கலிய நாயனார் பிறந்த தலம். சுந்தரமூர்த்தி சுவாமிகள் சங்கிலி நாச்சியாரை மணம் புணர்ந்த பதி. சுந்தர மூர்த்திகள் வரலாற்றுக் குறிப்புடைய மகிழடித்திருவிழா மாசி மகத்தில் மிகச் சிறப்பாக நடைபெறுகின்றது. இங்குத் தியாகராசர் சன்னிதி மிகச் சிறப்புடையது. கோவில் பெரியது. சுந்தரர் சங்கிலியார் திருவுருவங்கள் மணக் கோலத்தில் காட்சி யளிக்கின்றன. முற்றத் துறந்த பட்டினத்து அடிகள் வாழ்ந்து முக்தி யடைந்த பழம்பதி இது. கோவிலுக்கு அண்மையில் கடல் இருக்கின்றது. கடலோரத்தில் பட்டினத்தடிகட்கும் அப்பர் சுவாமிகட்கும் தனித் தனிக் கோயில்கள் இருக்கின்றன.