பக்கம்:திருத்தலப் பயணம்.pdf/283

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

있5 திருத்தலப்பயணம் சம்பந்தர் விளிதரு நீரும்மண்ணும் விசும் போடுஅனல் காலும்ஆகி அளிதருபே ரருளாளன் அர னாகிய ஆதிமூர்த்தி களிதருவண்டுபண்செய் கமழ்கொன்றையி னோடுஅணிந்த ஒளிதரு வெண்பிறையான் உறையும்இடம் ஒற்றியூரே. அப்பர் மருஉற்ற மலர்க்குழலி மடவாள் அஞ்ச மலைதுளங்கத் திசைநடுங்கச் செறுத்து நோக்கிச் செருஉற்ற வாள்.அரக்கன் வலிதான் மாளத் திருவடியின் விரல்ஒன்றால் அலற ஊன்றி. உருஒற்றி அங்குஇருவர் ஓடிக் கான ஓங்கின.அவ் ஒள்.அழலார் இங்கேவந்து, திருஒற்றி யூர்நம்ஊர் என்று போனார் செறிவளைகள் ஒன்றொன்றாச் சென்ற வாறே. சுந்தரர் ஈன்று கொண்டதோர் சுற்றம்.ஒன்று அன்றால் இயாவ ராகிலென் அன்புடை யார்கள் தோன்ற நின்றுஅருள் செய்து அளித் திட்டால் சொல்லு வாரைஅல் லாதன சொல்லாய்: மூன்று கண்ணுடை யாய் அடியேன்கண் கொள்வ தேகணக் குவழக் காகில் ஊன்று கோல்எனக்கு ஆவதுஒன்று அருளாய் ஒற்றி யூர் எனும் ஊர் உறை வானே. ஐயடிகள் காடவர்கோன் நாயனார் தஞ்சாக மூவுலகும் ஆண்டு தலைஅளித்திட்டு எஞ்சாமை பெற்றிடினும் யான்வேண்டேன்-நஞ்சும் கரந்துஉண்ட கண்டர்தம் ஒற்றியூர் பற்றி இரத்துஉண்டு இருக்கப் பெறின்.