பக்கம்:திருத்தலப் பயணம்.pdf/284

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொண்டைநாடு 255 சேக்கிழார் எழுதாத மறைஅளித்த எழுத்துஅறியும் பெருமானைத் தொழுதுஆர்வம் உறநிலத்தில் தோய்ந்துஎழுந்தே அங்கமெலாம் முழுதாய பரவசத்தின் முகிழ்த்தமயிர்க் கால்மூழ்க விழுதாரை கண்பொழிய விதிர்ப்புற்று விம்மினார். மண்ணிறைந்த பெருஞ்செல்வத் திருஒற்றி யூர்மன்னும் எண்ணிறைந்த திருத்தொண்டர் எழிற்பதியோர் உடன்ஈண்டி உள்நிறைந்த மகிழ்ச்சியுடன் உம்பர்பூ மழைபொழியக் கண்நிறைந்த பெருஞ்சிறப்பில் கலியாணம் செய்துஅளித்தார் பட்டினத்து அடிகள் ஒடுவிழுந்து சீழ்ப்பாயும் ஒன்பதுவாய்ப் புண்ணுக்கு இடுமருந்தை யானறிந்து கொண்டேன்:-கடுஅருந்தும் தேவாதி தேவன் திருஒற்றி யூர்த்தெருவில் போவார் அடியில் பொடி, இராமலிங்க சுவாமிகள் வெள்ளி மாமலை வீடுஎன உடையீர். விளங்கும் பொன்மலை வில்னைக் கொண்டிர் வள்ளி யீர்என நூம்மைவந்து அடைந்தால் வாய்தி றந்துஒரு வார்த்தையும் சொல்லீர் எள்ளில் எண்ணெய்போல் எங்கனும் நின்றீர்; ஏழை யேன்குறை ஏன்அறி யீரோ? ஒள்ளி யீர்!உமை அன்றிஒன்று அறியேன் ஓங்குசிர் ஒற்றி ஊருடை பீரே. 258. திருவலிதாயம் (பாடி) வலிதாயநாதர்-தாயம்மை சம்பந்தர் : 1. வழிபட்டநாள் : 20-4-56, 22-1-66 சென்னைக்கு மேற்கே 8 கல் தொலைவு.