பக்கம்:திருத்தலப் பயணம்.pdf/285

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

256 திருத்தலப்பயணம் சம்பந்தர் கண்நிறைந்தவிழி யின் அழலால்வரு காமன் உயிர்வீட்டிப் பெண்நிறைந்தஒரு பால்மகிழ்வுஎய்திய பெம்மான்உறைகோயில் மண்நிறைந்தபுகழ் கொண்டுஅடியார்கள் வணங்கும்வலி தாயத்து உள்நிறைந்தபெரு மான்கழலேத்தநம் உண்மைக்கதியாமே. இராமலிங்க சுவாமிகள் தேரும் நற்றவர் சிந்தைஎனும் தலம் சாரும் நற்பொரு ளாம்வலி தாயநீர்! பாரும் அற்றுஇப் பழம்கந்தை சாத்தினர் யாரும் அற்றவ ரோசொலும் ஐயரே? 259. வடதிருமுல்லைவாயில் மாசிலாமணிநாதர்-கொடியிடைநாயகி சுந்தரர் : 1. வழிபட்டநாள் : 20-4-56, 22-1-66. சென்னைக்கு மேற்கே 10 கல் தொலைவிலுள்ள அம்பத்துனர் இரயில் நிலையத்துக்கு வட மேற்கே 1% கல். ஆவடி இரயில் நிலையத்திற்கு வட கிழக்கே 2% கல். தொண்டைமான் வழி பட்ட தலம். சுவாமி சன்னிதியில் இரண்டு எருக்கம் தூண்கள் இருக்கின்றன. இவற்றில் பூண் பிடித்திருக்கின்றது. தெற்கே சிர்காழியின் பக்கத்தில் தேவாரம் பெற்ற திருமுல்லைவாயில் ஒன்றிருப்பதால் இது வடதிருமுல்லை வாயிலாயிற்று. தன் யானையைச் சுற்றிக்கொண்ட முல்லைக் கொடியைத் தொண்டைமான்வெட்டும்போது இறைவன் திருமேனியில்பட அதற்கு வருந்திய தொண்டைமானுக்கு அருள்சுரந்தார் கடவுள் 6T6ôT Liff. அவ்வாளின் வடு சிவலிங்கத்தின் மேல் காணப்படுகிறது. வெட்டுத் தாங்கிய ஈசர்' என்று இறைவன் அழைக்கப்படுகிறார்.