பக்கம்:திருத்தலப் பயணம்.pdf/286

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொண்டைநாடு 257 சுந்தரர் விண்பனிந்து ஏத்தும் வேதியா மாதர் வெருவிட வேழம்அன்று உரித்தாய். செண்பகச் சோலை சூழ்திரு முல்லை வாயிலாய்! தேவர்தம் அரசே! தண்பொழில் ஒற்றி மாநகர் உடையாய்! சங்கிலிக் காளன்கண் கொண்ட பண்பநின் அடியேன் படுதுயர் களையாய், பாசுப தா!பரஞ் சுடரே! இராமலிங்க சுவாமிகள் வண்ண மாமுல்லை வாயிலின் மேவிய அண்ண லே!அமு தே!அர சே!துதல் கண்ண னே!உனைக் காணவத் தோர்க்கெலாம் நண்ண ரும்துயர் நல்குதல் நன்றதோ? 260. திருவேற்காடு வேற்காட்டீசர்-வேற்கண்ணி சம்பந்தர் : 1. வழிபட்டநாள் : 20-4-56, 22-1-66. சென்னைக்கு மேற்கே 13 மைலில் உள்ள ஆவடி இரயில் நிலையத்தினின்றும், தெற்கே பூவிருந்தவல்லிக்குச் செல்லும் வழியில் நான்கு கல் தூரம் சென்று அங்குள்ள காடுவெட்டியாறு என்ற பழைய பாலாற்றைக் கடந்தால் அக்கரையில் இத்தலமிருக்கிறது. பூவிருந்தவல்லி இதற்குத் தெற்கே இரண்டு கல் தொலைவில் உளது. இது மூர்க்க நாயனார் பிறந்த தலம். அவருடைய திருவுருவம் கோயிலில் இருக்கிறது.