பக்கம்:திருத்தலப் பயணம்.pdf/287

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

있58 திருத்தலப்பயணம் சம்பந்தர் பூதம் பாடப் புறங்காட்டு இடையாடி வேத வித்தகன் வேற்காடு போதும் சாந்தும் புகையும் கொடுத்தவர்க்கு ஏதம் எய்துதல் இல்லையே. சேக்கிழார் மன்னிப் பெருகும் பெருந்தொண்டை வளநாடு அதனில் வயல்பரப்பும் நல்நித் திலவெண் திரைப்பாலி நதியின் வடபால் நலங்கொள்பதி அன்னப் பெடைகள் குடைவாவி அலர்புக்கு ஆட அரங்கின்இடை மின்னுக் கொடிகள் துகிற்கொடிகள் விழவிற் காடு வேற்காடு. 261. மயிலாப்பூர் (திருமயிலை) கபாலீசுரர்-கற்பகவல்லி சம்பந்தர் : 1 வழிபட்டநாள் : 11-2-58, 22-1-66 சென்னை மாநகரத்திலுள்ள தேவாரம் பெற்ற தலம். கோவில் பெரிது. மேற்குப்பார்த்த சந்நிதி. கோவிலுக்கு எதிரில் சுற்றிலும் படிக்கட்டுள்ள பெரிய த்ெப்பக் குளம். தேவியார் மயில் வடிவாக இருந்து இறைவனை வழிபட்டமையால் இப் பெயர் எய்தியது என்பர். திருஞானசம்பந்தர். இறந்துபோன பூம்பாவை என்ற பெண்ணின் என்பைத் தேவாரம் பாடி உயிர்ப்பித்த தலம். என்பு பெண்ணாகி நின்ற நிகழ்ச்சியைச் சேக்கிழார் அடிகள் பின்வரும் இரண்டு அரிய பாடல்களால் செப்புவார்.