பக்கம்:திருத்தலப் பயணம்.pdf/288

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொண்டைநாடு 259 கற்பகம் ஈன்ற செவ்விக் காமரு பவளச் சோதிப் பொற்றிரள் வயிரப் பத்திப் பூந்துணர் மலர்ந்த போலும் நற்பதம் பொலிவு காட்ட ஞாலமும் விசும்பும் எல்லாம் அற்புதம் எய்தத் தோன்றி அழகினுக்கு அணியாய் நின்றாள். எண்ணில்ஆண்டு எய்தும் வேதா. படைத்தவள் எழிலின் வெள்ளம், நண்ணும்.நான் முகத்தால் கண்டான் அவளினும் நல்லாள் தன்பால், புண்ணியப் பதினாறு ஆண்டு பேர்பெறும் புகலி வேந்தர். கண்ணுதல் கருணை வெள்ளம் ஆயிரம் முகத்தால் கண்டார். இக்கோயிலில் திருஞான சம்பந்தர் திருவுருவமும், பூம்பாவை வடிவமும் இருக்கின்றன. அப்பர் அடிகளும் இக் கோயிலை வணங்கினதாகச் சேக்கிழார் அடிகள் செப்புவார். வாயிலார் நாயனார் பிறந்தருளிய தலம் இது. "வாயிலார் என்னும் தபோதனர். மயிலைத் திருமாநகர் நலம் பெறத் தோன்றினார்" என்பார் சேக்கிழார். வாயிலாருக்கு இங்க ஒரு சந்நிதி இருக்கிறது. அறுபத்து மூவர் திருவிழா, பெரும் சிறப்பாக இங்கு நடைபெறுகிறது. தெய்வப்புலமைத் திருவள்ளுவ நாயனார் பிறந்து அருளிய தலம் இது. சம்பந்தர் மைப்பூசும் ஒண்கண் மடநல்லார், மாமயிலைக் கைப்பூசு நீற்றான். கபாலீச் சரம்அமர்ந்தான் நெய்ப்பூசும் ஒண்புழுக்கல் நேரிழையார் கொண்டாடும் தைப்பூசம் காணாதே போதியோ பூம்பாவாய். ஐயடிகள் காடவர்கோன் நாயனார் குயில்ஒத்த இருள்குஞ்சி, கொக்குஒத்து. இருமல் பயிலப் புகாமுன்னம் நெஞ்சே!-மயிலைத் திருப்புன்னை யங்கானல் சிந்தியாய் ஆகில் இருப்பின்னை, அங்காந்து இளைத்து.