பக்கம்:திருத்தலப் பயணம்.pdf/289

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

260 திருத்தலப்பயணம் சேக்கிழார் வரைவளர்மா மயில்என்ன மாடமிசை மஞ்சாடும் தரைவளர்சிர்த் திருமயிலைச் சங்கரனார் தாள்வனங்கி, உரைவளர்மா லைகள்அணிவித்து உழவாரப் படையாளி, திரைவளர்வே லைக்கரைபோய்த் திருஒற்றி யூர்சேர்ந்தார். 262. திருவான்மியூர் மருந்திசர்-சொக்கநாயகி சம்பந்தர் : 2. அப்பர் : . வழிபட்டநாள் : 23-4-56; 22-1-66 இத்தலம் மயிலாப்பூருக்குத் தெற்கே மூன்று கல் தொலைவில் இருக்கிறது. கோவிலுக்கு அண்மையில் கடற்கரை இருக்கிறது. வான்மீகி முனிவர் வணங்கிய தலம் என்பர். அம்முனிவரின் எழுந்தருளும் உருவம் கோயிலில் இருக்கிறது. சம்பந்தர் குண்டா டும்சமனர் கொடும்சாக்கியர் என்றுஇவர்கள் கண்டார் காரணங்கள் கருதாதவர் பேசதின்றாய்; திண்தேர் வீதியதார் திருவான்மி யூர்உறையும் அண்டா! உன்னைஅல்லால் அடையாது.எனது ஆதரவே. அப்பர் உள்ளம் உள்கலந்து ஏத்தவல் லார்க்குஅலால் கள்ளம் உள்ளவ ழிக்கசி வான்அலன் வெள்ள மும்,அர வும்விர வும்.சடை வள்ள லாகிய வான்மியூர் ஈசனே. சேக்கிழார் திருவான்மி யூர்மருந்தைச் சேர்ந்துபணிந்து அன்பினொடும் பெருவாய்மைத் தமிழ்பாடி அம்மருங்கு பிறப்பு:அறுத்துத் தருவார்தம் கோயில்பல சார்ந்துஇறைஞ்சித் தமிழ்வேந்தர் மருவாரும் மலர்ச்சோலை மயிலாப்பூர் வந்துஅடைந்தார்.