பக்கம்:திருத்தலப் பயணம்.pdf/290

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொண்டைநாடு 261 263. திருக்கக்சூர் (ஆலக்கோயில்) விருந்திட்டஈசர்-உமையம்மை (மைக்கண்ணி) சுந்தரர் : 1. வழிபட்டநாள் : -9-57, 27-1-66. செங்கற்பட்டிற்கு வடக்கிலுள்ள சிங்கப் பெருமாள் கோயில் இரயில் நிலையத்திற்கு வடமேற்கே 1% கல் அளவு. இங்கே கச்சூர் என்ற ஒரு கோயிலும்,கோயிலுக்கு மேற்கேகால்மைலில் ஆலக்கோயில் என்ற மருந்திசர் கோயிலும் இருக்கின்றன. சுந்தரர் பொய்யே உன்னைப் புகழ்வார் புகழ்ந்தால் அதுவும் பொருளாக் கொள்வானே! மெய்யே! எங்கள் பெருமான்! உன்னை நினைவார் அவரை நினைகண்டாய்: மையார் தடம்கண் மடந்தை பங்கா! கங்கார் மதியம் சடைவைத்த ஐயா! செய்யாய்! வெளியாய்! கச்சூர் ஆலக் கோயில் அம்மானே. 264. திருஇடைச்சுரம் இடைச்சுரநாதர்-இமையமடிக்கொடி சம்பந்தர் : 1. வழிபட்டநாள் : 9-9-57, 27-1-66. செங்கற்பட்டிலிருந்து கிழக்கே திருப்போரூருக்குச் செல்லும் வழியில் ஐந்து கல் சென்று, வடக்கே அரை மைல் சென்றால் இத்தலத்தை அடையலாம். மகாலிங்கம் ஒளி மயமாக மிக அழகாக இருக்கும்.