பக்கம்:திருத்தலப் பயணம்.pdf/291

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

262 திருத்தலப்பயணம் சம்பந்தர் தோடுஅணி குழையினர் சுண்ணவெண் ணிற்றர் சுடலையின்ஆடுவர் தோல்உடை யாகப் பீடுயர் செய்ததோர் பெருமையை உடையர் பேயுடன் ஆடுவர் பெரியவர் பெருமான் கோடல்கள் ஒழுகுவ முழுகுவ தும்பி; குரவமும் அரவமும் மன்னிய பாங்கர், ஏடவிழ் புதுமலர் கடிகமழ் சாரல் இடைச்சுர மேவிய இவர்வணம் என்னே. சேக்கிழார் "இருந்தஇடைச் சுரம்மேவும் இவர்வண்ணம் என்னே!"என்று அருந்தமிழின் திருப்பதிகத்து அலர்மாலை கொடுபரவித் திருந்துமனம் கரைந்துஉருகத் திருக்கடைக்காப் புச்சாத்திப் பெருந்தனிவாழ் வினைப்பெற்றார் பேருலகின் பேறானார். 265. திருக்கழுக்குன்றம் மலைமருந்துஈசர்-பெண்ணில்நல்லாள் சம்பந்தர் : அப்பர் : 1. சுந்தரர் 1. வழிபட்டநாள் : 1.3-2-58, 29-1-66. செங்கற்பட்டு இரயில் நிலையத்திற்குத் தென்கிழக்கே 9 கல் தொலைவு. ஊருக்குள் கோவில் இருக்கிறது. பக்கத்தில் உள்ள திருக்கழுக்குன்று மலையில் நாள்தோறும் உச்சிக் காலத்தில் இரண்டுகழுகுகள் வந்து உணவு எடுத்துக்கொண்டுசெல்வதை இன்றும் காணலாம். இம் மலையை வலம் வரலாம். இரண்டேகால்மைல் சுற்றளவு. மறைகளே மலையாக நிற்றலின் இம்மலையை வேதகிரி என்று கூறுவர். மணிவாசகப் பெருமான் திருவாசகத்தில், திருக்கழுக்குன்றப் பதிகம் என்ற ஒரு பதிகத்திலுள்ள ஏழு பாடல்களிலும் திருக்கழுக்குன்றத்தைப் பற்றிச் செப்புவதோடு, கிர்த்தித் திரு அகவலில் ஓர் இடத்திலும், போற்றித் திருஅகவலில் மற்றோர் இடத்திலும் பாராட்டுவார்.