பக்கம்:திருத்தலப் பயணம்.pdf/292

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொண்டைநாடு 263 அந்தகக் கவி வீரராகவ முதலியார் என்ற பெரும் புலவர் இத்தலத்திற்குப் புராணம் பாடியிருக்கிறார். சொக்கநாதப் புலவர் என்பவர் வஞ்சப் புகழ்ச்சியாக இத்தலத்தைப் பாடிய பாடல் ஒன்றைப்பாடற்பகுதியில் காண்க. சம்பந்தர் தேனகத்தார் வண்டு.அது உண்ட திகழ்கொன்றை. தானகத்தார் தண்மதி சூடித் தலைமேல்ஒர் வானகத்தார் வையகத் தார்கள் தொழுதுஏத்தும் கானகத்தான் காதல்செய் கோயில் கழுக்குன்றே. அப்பர் மூவிலைவேல் கையானை, மூர்த்தி தன்னை. முதுபிணக்காடு உடையானை, முதலா னானை. ஆவினில்.ஐந்து உகந்தானை அமரர் கோனை. ஆலாலம் உண்டுஉகந்த ஐயன் தன்னை. பூவினின்மேல் நான்முகனும், மாலும்போற்றப் புணர்வுஅரிய பெருமானைப் புனிதன் தன்னைக் காவலனைக் கழுக்குன்றம் அமர்ந்தான் தன்னைக் கற்பகத்தைக் கண்ணாரக் கண்டேன் நானே. சுந்தரர் கொன்று செய்த கொடுமை யால்பல சொல்லவே நின்ற பாவம் வினைகள் தாம்பல நீங்கவே சென்று சென்று தொழுமின் தேவர் பிரான்இடம், கன்றி னோடு பிடிது.ழ் தண்கழுக் குன்றமே. மணிவாசகர் மலங்கி னேன்கண்ணின் நீரை மாற்றி, மலங்கெ டுத்த பெருந்துறை விலங்கி னேன்வினைக் கேட னேன்.இனி மேல்வி ளைவது அறிந்திலேன்: இலங்கு கின்றதின் சேவ டிகள் இரண்டும் வைப்பிடம் இன்றியே கலங்கி னேன்கலங் காம லேவந்து காட்டி னாய்,கழுக் குன்றிலே.