பக்கம்:திருத்தலப் பயணம்.pdf/293

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

264 திருத்தலப்பயணம் சொக்கநாதப் புலவர் அடிபட்டீர் கல்லாலும் எறிபட்டீர்; அத்தனைக்கும் ஆளாய் அந்தப் படிபட்டும் போதாமல் - உதைபட்டீர்; இப்படியும் படுவார் உண்டோ? முடிபட்ட சடையுடையீர்! கழுக்குன்றீர்! முதற்கோணல் முற்றும் கோணல் இடிபட்டும் பொறுத்திருந்திர் சிவசிவ உமைத்தெய்வம் என்னல் ஆமோ? 266. அச்சிறுபாக்கம் பாக்கபுரேசர்-சுந்தரநாயகி சம்பந்தர் : 1 வழிபட்டநாள் : 6-2-58, 27-1-66. சென்னை-விழுப்புரம் இருப்புப் பாதையில் உள்ள ஓர் இரயில் நிலையம், சென்னையினின்றும் தெற்கே 59 கல் தொலைவு. சென்னை-விழுப்புரம் நெடுஞ்சாலையில் இருக்கிறது. விநாயகனை வணங்காது சென்ற காரணத்தால் தேரின் அச்சு முறிந்துபோன இடம் இது என்ப. அச்சு இறு பாக்கம் : அச்சு ஒடிந்த இடம். - சம்பந்தர் தேனினும் இனியர் பாலன நீற்றர். திங்கரும் பனையர்தம் திருவடி தொழுவார் ஊன்நயந்து உருக உவகைகள் தருவார் உச்சிமேல் உறைபவர் ஒன்றுஅலாது ஊரார்; வானகம் இறந்து வையகம் வணங்க வயம்கொளி நிற்பதொர் வடிவினை உடையார் ஆனையின் உரிவை போர்த்தளம் அடிகள் அச்சிறு பாக்கம்.அது ஆட்சிகொண் டாரே.