பக்கம்:திருத்தலப் பயணம்.pdf/294

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொண்டைநாடு 265 267. திருவக்கரை சந்திரசேகரர்-வடிவாம்பிகை சம்பந்தர் : 1. வழிபட்டநாள் : 26-6-58, 4-12-65. மயிலத்திலிருந்துவானுர் போகும் சாலையில் 4 மைல்சென்று. அங்கிருந்து வயல் வழியாக 5 கல் சென்றால் இத்தலத்தை அடையலாம். பாதை செம்மையில்லை. கோயில் மிகவும் பழுது அடைந்திருக்கிறது. சிவலிங்கத்தின் முகம் வகிர்ந்துவிடப்பட்டிருக்கின்றது. நந்தி, இராசகோபுரம்எல்லாம் சந்நிதியை விட்டு விலகி இருக்கின்றன. கூத்தப் பெருமான் இடக்காலை ஊன்றி வலக்காலைத்துக்கி நிற்கின்றார். துக்கிய திருவடியின் அமைப்புப் புதுமாதிரியாக இருக்கின்றது. காளியின் உருவம் மிகச் சிறப்புடையது. தமிழ் நாட்டிலேயே மிகச் சிறந்தது என்று கருதப்படுகிறது. வடக்குப்பிராகாரத்தில் திருமால் திருஉருவம் இருக்கின்றது. சம்பந்தர் சந்திர சேகர னே!அரு ளாய்என்று தண்விசும்பில் இந்திர னும்முத லாஇமை யோர்கள் தொழுதுஇறைஞ்ச அந்தர மூஎயி லும்அன லாய்விழ ஒர் அம்பினால் மந்தர மேருவில் லாவளைத் தான்இடம் வக்கரையே. 268. அரசிலி (ஒழிந்தியாப்பட்டு) அரசிலிநாதர்-பெரியநாயகி சம்பந்தர் : 1. வழிபட்டநாள் : 5-1-58, 4-12-65. புதுச்சேரியிலிருந்து திண்டிவனம் போகும் வழியில் வட மேற்கே 5 கல் சென்று, இரும்பை மாகாளத்தை அடைந்து, அங்கிருந்து ஒட்டன்பாளையம் வழியாய் வடகிழக்கே 3 மைல் சென்றால் இத்தலத்தையடையலாம்.