பக்கம்:திருத்தலப் பயணம்.pdf/295

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

266 திருத்தலப்பயணம் சம்பந்தர் கங்கை நீர்சடை மேலே கதம்மிகக் கதிர்இள வனமென் கொங்கை யாள்.ஒரு பாகம் மருவிய கொல்லைவெள் ஏற்றன்; சங்கை யாய்த்திரி யாமே தன்அடி யார்க்குஅருள் செய்து அங்கை யால்அனல் ஏந்தும் அடிகளுக்கு இடம்அர சிலியே. 269. இரும்பைமாகாளம் மாகாளேசுரர்-குயில்மொழி சம்பந்தர் : 1. வழிபட்டநாள் : 5-1-58, 4-12-65. புதுச்சேரியிலிருந்து திண்டிவனம் போகும் வழியில் வட மேற்கே 5 கல் சென்றால் இத்தலத்தை அடையலாம். சம்பந்தர் வேதவித் தாய்வெள்ளை நீறுபூ சிவினை யாயின கோதுவித் தாய் நீறு எழக்கொடி மாமதி லாயின ஏதுவித்து ஆயின திர்க்கும் இடம்இரும் பைதனுள் மாதவத் தோர்மறை யோர்தொழ நின்றமா காளமே.